இந்திய நிறுவனங்களின் முதலீடு விவரங்களை அளிக்க தயார்! சுவிஸ் அரசு அறிவிப்பு

Report Print Kabilan in சுவிற்சர்லாந்து

கருப்பு பணத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு ஆதரவு தரும் வகையில், இரண்டு இந்திய நிறுவனங்களின் முதலீடு பற்றிய விவரங்களை அளிக்க தயாராக உள்ளதாக சுவிட்சர்லாந்து அரசு தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில், இந்தியர்கள் பலர் தங்களது கருப்பு பணத்தை முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக கருப்புப் பணம் குறித்த தகவல்களை பெற, சுவிஸ் அரசுடன் இந்திய அரசாங்கம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் நிதி மோசடி தொடர்பாக விசாரணையை சந்தித்து வரும் ஜியோடெசிக் லிமிடெட், ஆதி எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய இரண்டு நிறுவனங்களின் முதலீடுகள் குறித்த தகவல்களை அளிக்க சுவிட்சர்லாந்தின் வரித்துறை ஒப்புக் கொண்டுள்ளது.

அத்துடன் இந்த நிறுவனங்களின் நிர்வாகிகள் பங்கஜ்குமார் ஓங்கார் ஸ்ரீவஸ்தவா, பிரசாந்த் சரத் முலேகர், கிரண் குல்கர்னி ஆகியோரது வங்கி முதலீடுகள் பற்றிய தகவல்களையும் அளிக்க தயாராக இருப்பதாகவும் சுவிஸ் தெரிவித்துள்ளது.

முன்னதாக, இந்த நிறுவனங்கள் மற்றும் நபர்கள் இந்தியாவில் செய்த நிதி மோசடிகள் மற்றும் வரி மோசடிகள் குறித்த ஆதாரங்களை இந்தியா சுவிஸ் அரசிடம் சமர்பித்து, அவர்களின் வங்கி முதலீடுகள் குறித்த விவரங்களை அளிக்குமாறு கேட்டுக்கொண்டது.

அதனைத் தொடந்து தற்போது நிர்வாக ரீதியிலான உதவியை அளிக்க சுவிட்சர்லாந்தின் வரித்துறை சம்மதித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers