சுவிட்சர்லாந்தில் ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற கார் ஒன்று தடுப்பில் மோதி தூக்கி வீசப்பட்டதில் கார் முற்றிலும் சேதமடைந்தது.
இளம் ஓட்டுநர் ஒருவர் தனது காரில் ரயில்வே கேட்டைக் கடக்க முயன்றபோது மயிரிழையில் உயிர் தப்பினார்.
ஆனால் தடுப்பில் மோதிய அவரது கார் தூக்கி வீசப்பட்டு பள்ளம் ஒன்றில் போய் விழுந்தது.
உயிர் தப்பிய அந்த இளைஞர் அந்த இடத்திலிருந்து ஓட்டம் பிடித்தார்.
பொலிசார் அந்த காரை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, 18 வயதான அந்த இளைஞர் தனது குடும்ப உறுப்பினர் ஒருவரை அழைத்துக் கொண்டு திரும்பி வந்தார்.
பொலிசார் அவரது லைசன்ஸைக் கைப்பற்றியதுடன் அவர் குடித்திருக்கிறாரா என்பதை அறிய இரத்தப் பரிசோதனை மேற்கொண்டனர்.
அந்த பரிசோதனையில் கார் ஓட்டுவதற்கு பாதுகாப்பற்ற அளவிற்கு அவர் குடித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரது கார் பயன்படுத்த இயலாத அளவிற்கு முற்றிலும் சேதமடைந்த நிலையில், அவரால் பல ஆயிரம் ஃப்ராங்குகள் சேதம் ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.