உங்களுக்காக எங்கள் பாரம்பரியங்களை மாற்றிக் கொள்ள முடியாது: சுவிஸ் அரசியல்வாதி சொல்வதன் பின்னணி

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து மக்கள் இன்னொரு நாட்டுக்கு செல்வதற்காக விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது, சுவிட்சர்லாந்தில் பாரம்பரியமாக பின்பற்றப்படும் ஒரு வழக்கத்தால் விசா விண்ணப்பங்களில் குழப்பம் ஏற்படுவதாக தெரியவந்துள்ள நிலையில், அது தங்கள் நாட்டு பாரம்பரியம் என்றும் அதை மாற்றிக் கொள்ள முடியாது என்றும் சுவிஸ் அரசியல்வாதி ஒருவர் கூறியுள்ளார்.

சுவிட்சர்லாந்தில் விசா விண்ணப்பப் படிவத்தில், ஒருவர் எந்த இடத்தைச் சேர்ந்தவர் என்றும் நீங்கள் பிறந்த இடம் எது என்றும் இரண்டு கேள்விகள் கேட்கப்பட்டிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

பொதுவாக விசா விண்ணப்பப்படிவத்தில் பிறந்த இடம் எது என்ற கேள்வி கேட்கப்பட்டிருக்கும்.

ஆனால், அது உங்கள் சொந்த ஊர் எது, என்ற கேள்விக்கான பதிலிலிருந்து ஒருவேளை மாறுபடலாம்.

அதாவது உண்மையில் பலரும் விண்ணப்பப் படிவங்களில் உண்மையைக் கூறுவதில்லை, பாஸ்போர்ட்டில் என்ன கொடுத்திருக்கிறார்களோ அதையே விசா விண்ணப்பப் படிவத்திலும் நிரப்பி விடுகிறார்கள்.

இதை மாற்றவேண்டும் என்ற கோரிக்கை ஒருபக்கம் எழுந்து வரும் நிலையில், சுவிஸ் பாரம்பரியவாதிகளோ அதை மாற்றக்கூடாது, சுவிட்சர்லாந்து மாறக்கூடாது என்கிறார்கள்.

Young Swiss People’s Party என்னும் கட்சியின் தலைவரான Benjamin Fischer, சுவிட்சர்லாந்தின் பாரம்பரியங்களை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் மற்ற நாடுகளின் சொந்த விருப்பம் என்கிறார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்