சுவிஸில் அதிகரிக்கும் அபராதத் தொகை: வாகன சாரதிகள் அவதானம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிஸ் மக்கள் 2019 ஆம் ஆண்டில் அபராதத் தொகைகளை அதிகமாக செலுத்த வேண்டியிருக்கும் என பத்திரிக்கை ஒன்றின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

எதிர்வரும் 2019 ஆம் ஆண்டில் மட்டும் சுவிஸ் அரசு அபராதத் தொகை என பொதுமக்களிடம் இருந்து சுமார் 250 மில்லியன் பிராங்குகளை எதிர்பார்ப்பதாக தெரியவந்துள்ளது.

அதாவது தனி நபர் வருமானத்தில் 45 பிராங்குகள் சுவிஸ் குடிமக்கள் அபராதத் தொகையாக அரசுக்கு செலுத்த வேண்டும்.

அந்த வகையில் சூரிச் நகரத்து மக்கள் 152 பிராங்குகள் செலுத்த வேண்டும். சூரிச் நகரத்தை அடுத்து Baden AG நகரம் 2019 ஆம் ஆண்டில் சுமார் CHF 4,620,500 தொகையை பொதுமக்களிடம் இருந்து அபராத வகையில் எதிர்பார்க்கிறது.

அதாவது ஒவ்வொரு குடிமக்களிடம் இருந்தும் 113 பிராங்குகள் அபராதமாக ஈடாக்க உள்ளது. 2018 ஆம் ஆண்டைவிடவும் இந்த கட்டணம் இருமடங்காகும்.

அபராத கட்டணம் அதிகரிக்க முதன்மை காரணமாக கூறப்படுவது மண்டலம் முழுமையும் ரடார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

அபராத கட்டணம் அதிகரித்தாலும், வருவாய் என்பது 2018 ஆம் ஆண்டில் இருந்த அளவுக்கே இருக்கும் எனவும் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

சோலோதுர்ன் மண்டலத்திலேயே அபராதம் மிக மிக குறைவு என கூறப்படுகிறது. இங்கு வெறும் 6 பிராங்குகள் மட்டுமே வசூலிக்கின்றனர்.

ஆனால் யூரி மண்டலத்தில் 2019-ல் வசூலிக்கப்படும் அபராதத் தொகையானது 107 பிராங்குகள்.

இதனிடையே அபராதத் தொகை எதிர்பார்ப்பு தொடர்பில் பொலிஸ் தலைவர் வெளியிட்டுள்ள கருத்துக்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

யார் யார் எவ்வளவு செலுத்த வேண்டும்:

 • City police Zurich: CHF 152 per capita
 • Municipal police Baden: CHF 113 per capita
 • Cantonal police Uri: 107 francs per capita
 • Cantonal police Basel-Stadt: CHF 79 per capita
 • Cantonal police Schwyz: CHF 44 per capita
 • Cantonal Police St. Gallen: CHF 43 per capita
 • Cantonal police Bern: CHF 39 per capita
 • Stadtpolizei Aarau: CHF 30 per capita
 • Stadtpolizei Luzern: CHF 19 per capita
 • Cantonal Zurich: CHF 17 per capita
 • Cantonal police Aargau: CHF 7 per capita
 • Cantonal police Solothurn: CHF 6 per capita

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்