பனிப்பாறைச்சரிவோ என வியக்க வைத்த மூடுபனி அலைகள்: ஆச்சரிய வீடியோ

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் Jura மலைப்பகுதியில் பிரமாண்டமாய் திரண்ட மூடுபனி அலைகள் பனிப்பாறைச்சரிவு ஏற்பட்டதோ என எண்ணத் தோன்றும் விதத்தில் நகர்ந்து செல்லும் காட்சிகள் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன.

சுற்றுலாத்துறை அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோ ஆயிரக்கணக்கானவர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.

மூடுபனி அலைகள் என அழைக்கப்படும் இந்த நிகழ்வு ஒரு வானியல் சிறப்பு நிகழ்வாகும்.

இந்த நிகழ்விற்கு மிக நீண்ட மலைத்தொடர் ஒன்று இருப்பது அவசியம். காற்று வேகமாக அடிக்கும்போது உயர் அழுத்தப் பகுதியிலிருந்து குறைவழுத்தப் பகுதிக்கு மூடு பனி ஒரு அலை போல் தவழ்ந்தோ அல்லது பாய்ந்தோ செல்லும்போது இந்த மூடுபனி அலைகள் உருவாகின்றன.

இவை வெறும் மூடுபனி என்றாலும், அது நகர்ந்து வருவதைப் பார்ப்பதற்கு பெரிய பனிப்பாறைச் சரிவு ஒன்று ஏற்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தக் கூடியது என்பதால் சில நேரங்களில் இதை மூடுபனி பனிப்பாறைச் சரிவு அல்லது மூடுபனி சுனாமி என்றும் அழைப்பதுண்டு.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers