லொட்டரியில் 30 மில்லியன் பிராங்குகளை அள்ளிய சுவிஸ் நபர்: தகவலை வெளியிட மறுத்த நிர்வாகம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் லோட்டோ ஜாக்பாட் லொட்டரியில் நபர் ஒருவர் சுமார் 30 மில்லியன் பிராங்குகளை பரிசாக அள்ளியுள்ளார்.

பாதுகாப்பு கருதி குறித்த நபர் தொடர்பில் எந்த தகவலும் வெளியிடப்படாத நிலையில் அவர் வடமேற்கு சுவிட்சர்லாந்தை சேர்ந்தவர் என கூறப்படுகிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில் சுவிஸ் நபருக்கு இந்த அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

புதனன்று குறித்த நபர் சரியான ஆறு எண்களை தெரிவு செய்து 29.2 மில்லியன் பிராங்குகளை சொந்தமாக்கியுள்ளார்.

வடமேற்கு சுவிட்சர்லாந்தில் குடியிருக்கும் நபர் ஒருவரே இந்த 30 மில்லியன் பிராங்குகளை வென்றுள்ளார்.

7.50 பிராங்குகள் கொண்ட லொட்டரியில் இந்த தொகை வெற்றி பெற்றுள்ளதாக லோட்டோ லொட்டரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஜூன் மாதம் பிரெஞ்சு மொழி பேசும் சுவிஸ் நாட்டவர் ஒருவர் லோட்டோ ஜாக்பாட்டில் 18 மில்லியன் பிராங்குகளை அள்ளியிருந்தார்.

ஆகஸ்டு மாதம் இருவர் தலா 4.3 மில்லியன் பிராங்குகளை பரிசாக வென்றுள்ளனர். சுவிட்சர்லாந்தில் இதுவரை நபர் ஒருவர் லொட்டரியில் 48.6 மில்லியன் பிராங்குகள் வென்றதே சாதனையாக உள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு சுவிஸ் நாட்டவர்கள் மூவர் 70 மில்லியன் பிராங்குகளை வென்று சமமாக பகிர்ந்து கொண்டுள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers