சுவிட்சர்லாந்தில் பிரித்தானிய பிரதமர் தங்கிய அரண்மனை வாடகைக்கு: விலை என்ன?

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

நம்மில் பலருக்கும் அரண்மனையில் வாழும் ஒரு கனவு இருக்கும்.

அப்படிப்பட்ட கனவை நனவாக்க சுவிட்சர்லாந்திலுள்ள அரண்மனை ஒன்றின் உரிமையாளர் ஒருவர் முன்வந்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் மையப்பகுதியில் இருக்கும் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த Allmendingen அரண்மனையில் உள்ள, 12 படுக்கையறைகள் கொண்ட ஒரு பகுதி 2019ஆம் ஆண்டின் கோடைக்காலம் முதல் வாடகைக்குக் விடப்பட உள்ளது.

பெர்ன் ரயில் நிலையத்திலிருந்து 8 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள இந்த அரண்மனையின் வாடகை மாதம் ஒன்றிற்கு ’வெறும் 8,450 சுவிஸ் ஃப்ராங்குகள் மட்டுமே’.

ஒருவேளை இது மிகவும் அதிகம் என நீங்கள் நினைக்கலாம், ஆனால், அரண்மனை ஒன்றில் வாழ வேண்டும் என்னும் கனவுகள் கொண்ட ஒரு நபரைப் பொருத்தவரையில், விலைவாசி அதிகம் உள்ள சுவிட்சர்லாந்தில் தற்போதைய வீட்டு வாடகையை ஒப்பிடும்போது இது குறைவுதான்.

தோட்டங்களுக்கு மத்தியில் அமைந்துள்ள அரண்மனையில், வாடகைக்கு விடப்படும் பகுதியில், காற்று வாங்க ஒரு அருமையான இடம், பெண்களுக்கான தனியறை, பாதுகாப்பாக வாக்கிங் செல்வதற்கான பாதை ஆகியவற்றுடன் மூன்று பாத்ரூம்கள் மற்றும் ஒரு துணி துவைக்கும் அறையும் உள்ளன.

நீங்கள் பேருந்தில் வர விரும்பினால், அரண்மனைக்கு பக்கத்திலேயே ஒரு பேருந்து நிலையமும் உள்ளது.

கார் நிறுத்துவதற்கான பெரிய இடம் ஒன்று, முழு நேரமும் தோட்டத்தை கவனித்துக் கொள்ள ஒரு தோட்டக்காரர் என அனைத்து வசதிகளும் கொண்ட இந்த அரண்மனியில் இன்னொரு விசேஷம், முன்னாள் பிரித்தானிய பிரதமரான வின்ஸ்டன் சர்ச்சில், சுவிஸ் ஃபெடரல் கவுன்சிலுடன் இங்குதான் ஒரு சந்திப்பில் உரையாற்றினார்.

அந்த உரையில் இந்த அரண்மனையை அவர், வசீகரத் தோற்றம் கொண்ட சுற்றுப்புறம் கொண்ட அரண்மனை என்று வர்ணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers