சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினர் விடுக்கும் அவசர வேண்டுகோள்

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து

எமது மக்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உடனடியாக தேவைப்படுகிறது.

உதவ முன் வாருங்கள்....

தாயக்கத்தின் வடக்கில் அவசர நிலைமை இரணைமடுவின் அனைத்து வான்கதவுகளும் திறக்கப்பட்டன.

வடக்கில் பொழிந்துவரும் கனமழையால் இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 38 அடி 6 அங்குலத்தை தாண்டியது. மேலதிக நீரை வெளியேற்றவென 11 வான்கதவுகளும் முழுதாக திறக்கப்பட்டது இதன் காரணமாக மேலும் வெள்ளத்தில் மூழ்கியது நீரோட்டப்பகுதிகளும் நீரேந்துப்பகுதிகளும்.

வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்க மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றனர். நிலைமை மேலும் மோசமாகுமென கருதப்படுகின்றமையால் மக்களை விழிப்போடும் பாதுகாப்பு ஏற்பாடுகளோடும் இருக்க அறிவுறுதப்படுகின்றனர்.

எமது உறவுகளுக்கு உதவுவதற்காக எம்மால் முடிந்த அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்து உறவுகள் மூலம் வினியோகிக்க உள்ளோம் உதவி செய்ய விரும்பும் உறவுகள் எம்மை தொடர்பு கொள்ளவும்.

வங்கி கணக்கு விபரம்:-

BALACHANDRAN CHARLES

TICINO TAMIL STUDENTS

IBAN: CH92 0900 0000 6526 9141 1

Bank: PostFinance

தொடர்புகளுக்கு:- 079 358 71 57 , 0788728886 , 0763404854

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers