விமான விபத்தில் இறந்த குடும்பம்: பழிக்குப் பழி வாங்கிய நபரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

விமான விபத்தொன்றில் தனது மனைவியையும் பிள்ளைகளையும் பறிகொடுத்த ரஷ்யர் ஒருவர், அந்த நேரத்தில் பணியில் இருந்த சுவிஸ் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை பணியாளரை கத்தியால் குத்திக் கொன்று தனது குடும்பத்தின் இழப்பிற்கு பழி தீர்த்துக் கொண்டார்.

இந்த சம்பவம் பின்னர் இரண்டு முறை திரைப்படமானது. ஆங்கிலத்தில் Aftermath என்ற பெயரில் வெளியான அந்த படத்தில் அர்னால்ட் ஸ்வாஷ்னெகர் ஹீரோவாக நடித்தார்.

ஜேர்மனியில் நிகழ்ந்த விமான விபத்து ஒன்றில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதிக்கொள்ள Vitaly Kaloyev என்னும் ரஷ்யரின் மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உயிரிழந்தனர்.

தனது குடும்பத்தை தானே தேடிச்சென்ற Kaloyev, விமானத்திலிருந்து தூக்கி வீசப்பட்டு மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த தனது மகள் டயானாவின் உடலையும், 36,000 அடி உயரத்திலிருந்து விழுந்து வயல் ஒன்றில் கிடந்த தன் மனைவியின் உடலையும் பேருந்து நிலையம் ஒன்றின் முன் கிடந்த தனது மகனின் உடலையும் கண்டெடுத்தார்.

அவர்கள் மரணத்திற்கு Peter Nielsen என்னும் சுவிஸ் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை பணியாளரின் கவனக்குறைவுதான் காரணம் என்று முடிவு செய்த Kaloyev, அவரை சட்ட ரீதியாக சந்திக்க முயன்றார், 130,000 பவுண்டுகள் இழப்பீடு கோரினார், எதுவும் நடக்கவில்லை.

சொல்லப்போனால் வழக்கிலிருந்து Nielsen விடுவிக்கப்பட இருந்தார். இதையறிந்த Kaloyev, தனியார் துப்பறியும் நிபுணர் ஒருவர் உதவியுடன் Nielsenஐ தேடிக் கண்டு பிடித்தார்.

Nielsenஇன் குடும்பத்தாரின் கண் முன்னேயே அவரைக் கத்தியால் குத்தி கொலை செய்தார் Kaloyev.

Kaloyev, தனது குடும்பத்தை இழந்ததுபோலவே, தனது மனைவி குழந்தைகள் மடியில் உயிரிழந்தார் Nielsen.

எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சுவிட்சர்லாந்து சிறையில் அடைக்கப்பட்ட Kaloyev, மூன்றாண்டுகள் தண்டனை அனுபவித்த நிலையில், தனது குடும்பத்தை இழந்ததால் அவர் அனுபவித்த மன வேதனை, வழக்கில் சரியாக கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை என்பது தெரிய வந்ததையடுத்து சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

2007ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அவருக்கு ஒரு ஹீரோவுக்குரிய வரவேற்பளிக்கப்பட்டதோடு, கட்டுமானத்துறை துணை அமைச்சர் பதவியும் அளிக்கப்பட்டது.

தான் சிறையில் இருந்த நாட்களில் சிறையில் இருந்த யாரும் தன்னை கண்டிக்கவில்லை என்று கூறியுள்ள Kaloyev, அதற்கு மாறாக தன்னை அனைவரும் மரியாதையுடன் நடத்தியதாக தெரிவிக்கிறார்.

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டபின், சில ஆண்டுகளுக்குப்பின் Dzarasova என்னும் பெண்ணை மணந்து கொண்ட Kaloyev, சமீபத்தில் தான் இரட்டைக் குழந்தைகளுக்கு தந்தையானதாக தெரிவித்துள்ளார்.

தான் இழந்த குடும்பத்தை மீண்டும் பெற்றுக் கொண்ட மகிழ்ச்சியை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ள Kaloyev, Nielsenஐக் கொன்றதில் தனக்கு சிறிதளவும் வருத்தம் இல்லை என்கிறார்.

அந்த மோசமான விமான விபத்தில் 45 குழந்தைகள், 15 பெரியவர்கள், 9 விமான ஊழியர்கள், இரண்டு விமானிகள் என மொத்தம் 71 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers