ஸ்கேண்டினேவிய இளம்பெண்கள் கொலை தொடர்பில் சுவிஸ் நாட்டவர் கைது: மேலும் பல புதிய தகவல்கள்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

ஸ்கேண்டினேவிய இளம்பெண்கள் மொராக்கோவில் கொல்லப்பட்டது தொடர்பில் சுவிஸ் - ஸ்பெயின் குடிமகன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டென்மார்க்கைச் சேர்ந்த Louisa Vesterager Jespersen (24) மற்றும் நார்வேயைச் சேர்ந்த Maren Ueland (28) ஆகிய இருவரும் இம்மாதம் 17ஆம் திகதி அட்லஸ் மலைத்தொடர்களில் அமைந்துள்ள Imlil என்ற கிராமத்தின் அருகே கொலை செய்யப்பட்டுக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் ஐ.எஸ் அமைப்பைச் சார்ந்தவர்கள் வெளியிட்டதாக கருதப்பட்ட ஒரு வீடியோ, ஸ்கேண்டினேவிய இளம்பெண்களின் கொலையுடன் தொடர்புடையது என செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சனிக்கிழமை கைது செய்யப்பட்ட சுவிஸ் - ஸ்பெயின் நபர் ஒருவரும் தீவிரவாத செயல்களுக்காக மொராக்கோ நாட்டவர்களை பணிக்கமர்த்தும் நபர் என்று சந்தேகிக்கப்பட்டது.

இதே கொலை தொடர்பாக, வெளியான வீடியோ ஒன்றின் அடிப்படையில், தீவிரவாத தொடர்புடையவர்கள் என கருதப்பட்ட நான்கு முக்கிய குற்றவாளிகள் உட்பட மேலும் 19பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், பொலிஸ் மற்றும் உள்நாட்டு உளவுத்துறை செய்தி தொடர்பாளரான Boubker Sabik, கைது செய்யப்பட்ட நான்கு பேரும் தனிப்பட்ட முறையில் கொலை செய்பவர்கள் என்றும், அவர்களுக்கும் நடந்த குற்றச்செயலுக்கும், ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பில்லை என்றும் தெரிவித்துள்ளார்.


You May Like This..

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers