நீதிமன்றத்தை நாடும் சுவிஸ் நிர்வாண கலைஞர்கள்: காரணம் இதுதான்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற நிர்வாண கலைஞரான தாமஸ் சோலிங்கர், தமது முயற்சிகளுக்கு ஆதரவு கோரும் வகையில் நீதிமன்றத்தை நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிர்வாண கலைஞரான தாமஸ் சோலிங்கர், தமது குழுவினருடன் மேற்கொண்ட கலை நிகழ்ச்சி ஒன்றிற்கு பொதுமக்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது.

2017 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சோலிங்கர் மற்றும் அவரது குழுவினர் ஐவருடன் இணைந்து நிர்வாண நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்.

சுமார் 45 நிமிடங்கள் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் திடீரென்று நபர் ஒருவர் சம்பவப்பகுதியில் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டுள்ளார்.

மட்டுமின்றி பொலிசாருக்கும் தகவல் அளித்துள்ளார். தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார் சோலிங்கர் மற்றும் அவரது குழுவினர் ஐவருக்கும் அபராதம் விதித்துள்ளனர்.

பிச்சை எடுப்பது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் நடந்துகொள்வது உள்ளிட்ட விவகாரங்களுக்கே அபராதம் விதிக்கப்பட வேண்டும் என சட்டம் வரையறுக்கப்பட்டுள்ள நிலையில்,

நிர்வாணம் எந்த வகையில் சட்டத்துக்கு புறம்பானது எனவும், கலை வடிவம் எவ்வாறு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் என்பது புரியவில்லை என சோலிங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பில் உள்ளூர் நீதிமன்றத்தை நாட இருப்பதாகவும் சோலிங்கர் தெரிவித்துள்ளார்.

160 பிராங்குகளுக்கும் அதிகமாக பிழை விதித்திருப்பது சட்ட விரோதம் என கூறும் சோலிங்கர், உள்ளூர் நிர்வாகம் தமது கலை வடிவத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதால் 200 பிராங்குகள் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers