சுவிஸில் அடுக்குமாடி குடியிருப்பை நாடுவோருக்கு இனிப்பான தகவல்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் அடுக்குமாடி குடியிருப்புக்கான வாடகை கட்டணம் மீண்டும் கடும் சரிவை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் வாடகை கட்டணத்தில் 0.6 சதவிகிதம் சரிவை சந்தித்துள்ளதாகவும், இது ஆண்டின் மிக குறைவான விகிதம் எனவும் தெரியவந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக கடந்த 2017 ஆம் ஆண்டை விடவும் 2018 ஆம் ஆண்டில் வாடகை கட்டணங்கள் அரை சதவிகிதம் சரிவை சந்தித்துள்ளது.

2018 ஜனவரி தொடங்கி சில மாதங்கள் உச்சத்தில் இருந்த வாடகை கட்டணங்கள், ஆண்டின் இரண்டாவது பாதியில் கடும் சரிவை சந்தித்துள்ளது.

இருப்பினும் மத்திய சுவிஸ் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான வாடகை கட்டணங்கள் 2.3 சதவிகித அதிகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers