சுவிற்சர்லாந்தில் பயங்கரமான விபத்தில் சிக்கிய பேருந்து விவகாரம்: கோமா நிலைக்கு சென்ற ஓட்டுநர் மரணம்

Report Print Vijay Amburore in சுவிற்சர்லாந்து

சுவிற்சர்லாந்தில் பயங்கரமான கார் விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு சென்ற ஓட்டுநர் உயிரிழந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜூரிச் அருகில் உள்ள A3 நெடுஞ்சாலையில் கடந்த டிசம்பர் 16 ம் திகதி சென்று கொண்டிருந்த பேருந்து ஒரு சுவரில் மோதி பெரும் விபத்துக்குள்ளானது.

இதில் சம்பவ இடத்திலேயே 37 வயதான இத்தாலிய பெண் பலியாகினர். மேலும் 40 பேர் காயமடைந்தனர்.

விபத்தின் போது சக்கரத்தில் சிக்கி படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 57 வயதான ராபர்ட்டோ டி என்னும் இத்தாலி பேருந்து ஓட்டுநர் கோமா நிலைக்கு சென்றடைந்தார்.

இந்த நிலையில் அவரும் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் தெளிவான தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers