அமெரிக்காவுடனான வர்த்தக உறவுகள் தொடர்பான பேச்சு வார்த்தைகளை மீண்டும் துவங்கும் சுவிட்சர்லாந்து

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

இம்மாதம் நடைபெற உள்ள உலக பொருளாதார உச்சி மாநாட்டில் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சு வார்த்தைகளை மீண்டும் துவங்க விரும்புகிறது சுவிட்சர்லாந்து.

இதற்கு முன்பு 2006ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்ததையடுத்து, தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான முயற்சிகளில் பெரிய அளவில் முன்னேற்றம் காணவில்லை.

தற்போது அதிபர் பொறுப்பு வகிக்கும் சுவிட்சர்லாந்தின் நிதி அமைச்சரான Ueli Maurer, இது மீண்டும் பேச்சுவார்த்தைகளை துவக்குவதற்கான சரியான வாய்ப்பு என்றார்.

ஜனவரி மாதம் 22ஆம் திகதி முதல் 25 வரை நடக்க இருக்கும் உச்சி மாநாட்டில், Ueli Maurer அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திக்க இருக்கிறார்.

அந்த சந்திப்பு உறுதி செய்யப்பட்டுவிட்டது என்று தெரிவித்த Ueli Maurer, மீண்டும் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை அமுலுக்கு கொண்டு வர முயற்சிக்கிறோம் என்றார் Ueli Maurer.

முன்னதாக செப்டம்பர் மாதத்தில், முன்னாள் பொருளாதார அமைச்சரான Johann Schneider-Ammann, தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சு வார்த்தைகளை மீண்டும் துவக்க எடுத்த முயற்சிகள், அமெரிக்கா சார்பில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியவர், வேறு பல விடயங்களில் கவனம் செலுத்த வேண்டி வந்ததையடுத்து, பேச்சு வார்த்தையில் நல்ல பலன் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers