சுவிட்சர்லாந்தில் ரத்த வெள்ளத்தில் கண்டெடுக்கப்பட்ட மர்ம நபர்: மூவர் கைது

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் பெர்ன் மாகாணத்தில் ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட நபர் தொடர்பில் பொலிசார் மூவரை கைது செய்துள்ளனர்.

பெர்ன் மாகாணத்தின் Thun நகரில் நபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவல் அறிந்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார் அந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் மோப்ப நாய்களின் உதவியுடன் சம்பவப்பகுதியில் விசாரணை மேற்கொண்ட பொலிசார், இந்த விவகாரத்தில் பலர் ஈடுபட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

மேலும் வாக்குவாதத்தில் ஏற்பட்ட சிலர் பின்னர் கத்தியால் தாக்கியிருக்கலாம் எனவும், பாதிக்கப்பட்ட நபர் படுகாயமடைந்த நிலையில் எஞ்சியவர்கள் தப்பியிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக மூவரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிசார், உண்மையான குற்றவாளியை உடனடியாக கைது செய்வோம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் நடந்த பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொலிசார் முக்கிய பகுதிகளை மூடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்