சுவிட்சர்லாந்தில் குற்றுயிராக மீட்கப்பட்ட நபர்: வெளியான பின்னணி தகவல்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் ரத்தவெள்ளத்தில் மீட்கப்பட்ட நபர் தொடர்பில் பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெர்ன் மாகாணத்தில் திங்களன்று ரத்தவெள்ளத்தில் மீட்கப்பட்ட நபர் தொழில் தகராறு காரணமாகவே கொடூரமாக தாக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்றுவரும் 44 வயதான அந்த நபர் தாம் தாக்கப்பட்டதன் காரணம் மற்றும், யார் யார் தாக்கினார்கள் எனவும் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

மூவர் தம்மை சுற்றிவளைத்து தாக்கியதாகவும், அது தந்தை மகன் மூவர் எனவும் அவர்கள் புதிதாக திறக்கவிருக்கும் உணவகத்திற்கு ஆதரவு திரட்டவே தம்மை தாக்கியதாகவும் கூறியுள்ளார்.

முதலில் மூவரும் தம்மை மிகவும் மோசமாக திட்டியதாகவும், பின்னரே தாக்கியதாகவும் கூறும் அந்த நபர், தாம் தமது வாகனத்தை நெருங்கிய நிலையில், திடீரென்று தம்மை அவர்கள் தாக்கியதாக தெரிவித்துள்ளார்.

அந்த மூவரில் ஒருவர் தம்மை கத்தியால் 5 முறை குத்தியதாக கூறும் அவர், சந்தேகமே இன்றி அவர்கள் என்னை கொலை செய்யும் நோக்கிலே தாக்கியுள்ளனர் என்றார்.

இருப்பினும் பொலிசார் இதுவரை என்ன நடந்தது என்பது தொடர்பில் எந்த தகவலையும் வெளியிடவில்லை.

தாக்குதலில் ஈடுபட்ட மூவரும் துரிதமாக கைது செய்யப்பட்டார்கள் என்ற போதும் விசாரணை முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers