சுவிஸ் பகுதியில் மாயமான போர் விமானம்: விழுந்து நொறுங்கியதா?

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

பிரான்சின் போர் விமானம் ஒன்று சுவிஸ் - பிரான்ஸ் எல்லையில் அமைந்துள்ள ஜூரா மலைத்தொடருக்கு மேல் பறக்கும்போது மாயமான நிலையில், அது விழுந்து நொறுங்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

Mirage 2000 வகை போர் விமானம் ஒன்று நேற்றையதினம் ஒத்திகை நிகழ்ச்சி ஒன்றிற்காக பிரான்சிலிருந்து இரண்டு பேருடன் புறப்பட்டது.

கடைசியாக அந்த விமானம் ஜெனீவாவுக்கருகில் Haut-Doubs மற்றும் Haut-Jura பகுதிகளுக்கிடையில் அமைந்துள்ள பனிபடர்ந்த மலைப்பகுதியில் நேற்று காலை 11 மணியளவில் தென்பட்டதாக பிரான்ஸ் விமானப்படையின் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், ஒரு வரைபடம், ஒரு பாராசூட் உட்பட விமானத்தின் சில பாகங்கள், Mignovillard கிராமத்தில் காணப்பட்டதாக பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜூரா பகுதி ராணுவப் பிரிவு அந்த போர் விமானம் Mouthe மற்றும் Mignovillard பகுதிகளுக்கிடையில் பறந்ததாக தெரிவித்திருந்தது.

அதற்கு பிறகு அந்த விமானத்தில் பயணம் செய்த ஒரு ஆண் மற்றும் பெண்ணிடமிருந்து எந்த தகவலும் இல்லை என்றும், காணாமல்போன விமானத்தை தேடும் பணி மும்முரமாக நடைபெற்று வருவதாகவும், பிரான்ஸ் விமானப்படையின் செய்தி தொடர்பாளரான கர்னல் Cyrille Duvivier பாரீஸில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஒன்றில் தெரிவித்தார்.

பனிப்பொழிவால் தேடுதல் வேட்டை கடினமானதாக இருப்பதாக தெரிகிறது. மாயமான Mirage 2000 விமானத்தில் ஆயுதங்கள் எதுவும் இல்லை என்பதோடு, உபரியாக எரிபொருள் டாங்கும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers