சூரிச்சில் கால்பந்து ரசிகர்கள்மீது தாக்குதல்: பத்து ரவுடிகள் கைது

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சூரிச்சிலுள்ள ஜேர்மன் கால்பந்து ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக பத்து ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

FC சூரிச் அணிக்கும் (FCZ) Bayer Leverkusen அணிக்கும் நடந்த Europa லீக் போட்டியின்போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

சென்ற புதனன்று கைது செய்யப்பட்ட அந்த 21 முதல் 34 வயதுள்ள பத்து பேரும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும்வரை காவலில் வைக்கப்படுவார்கள் என்று நேற்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவர்கள் நடத்திய தாக்குதல்களில் பலர் காயமடைந்ததோடு, மோசமாக காயமடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தாக்குதல் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டிருந்த பொலிசார், கடந்த வாரம் அந்த பத்துபேரையும் கைது செய்தனர்.

சூரிச்சில் கடந்த சில மாதங்களாகவே கால்பந்து ரகிகர்களிடையேயான மோதல் அதிகரித்து வருகிறது.

இந்த மோதல்களின் பின்னணியில் இருக்கும் குழுவில் 200 முரட்டு ரசிகர்கள் இருப்பதாக பொலிசார் கருதுகின்றனர்.

சுவிட்சர்லாந்தில் கடந்த சில ஆண்டுகளாகவே ரவுடியிசம் ஒரு ஒரு பிரச்சினையாக இருந்து வருகிறது.

2016ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து, ரவுடிகள் என தெரிய வந்த, சுமார் 800 பேருக்கு பிரான்சில் நடைபெற்ற யூரோ 2016 கால்பந்தாட்டப் போட்டிகளுக்கு செல்ல தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்