சிறுவனிடம் விமானம் ஓட்டச் சொன்ன விமானி: பின்னர் நடந்த கோர சம்பவம்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சிறுவர்கள் விமானம் இயக்கப்படுவதை பார்ப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நிகழ்ச்சியின்போது, அந்த சிறுவர்களில் ஒருவனிடமே விமானத்தை இயக்கும்படி விமானி கூற, சிறுவன் இயக்கிய அந்த விமானம் சுவிட்சர்லாந்தில் விழுந்து நொறுங்கிய சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததோடு ஒரு இளம்பெண் படுகாயமடைந்தாள்.

பறக்கும் கிளப் ஒன்றின் சார்பில் கேம்ப் ஒன்றிற்கு செல்லும்போது, விமானம் இயக்கப்படுவதைப் பார்ப்பதற்காக வந்திருந்த 14 வயது சிறுவனிடமே விமானம் ஓட்டும் பொறுப்பை ஒப்படைத்துள்ளார் அந்த விமானத்தின் விமானி.

Piper PA-28 ரக விமானம் ஒன்றில் சிறுவர்கள் இளைஞர்கள் மற்றும் விமானி ஒருவரும் பயணிக்கும்போது, சிறுவன் ஒருவனிடம் விமானம் ஓட்டும் பொறுப்பை ஒப்படைத்தார் அந்த விமானி.

அவர் எடுத்த முற்றிலும் தவறான அந்த முடிவு, மூவரின் உயிரைக் குடித்தது. அத்துடன் விமானத்தில் பயணித்த 17 வயது இளம்பெண் ஒருவரும் படுகாயமடைந்தார்.

புறப்பட்டு பத்தே நிமிடங்களில் அந்த விமானம் விழுந்து நொறுங்கியது. அந்த விமானம் தென் கிழக்கு சுவிட்சர்லாந்தில் பயணிக்கும்போது இந்த விபத்து நேரிட்டது.

சுவிஸ் போக்குவரத்து பாதுகாப்பு விசாரணை அமைப்பு நேற்று வெளியிட்ட தனது அறிக்கையில், அபாயகரமான ஒரு முடிவை விமானி எடுத்துள்ளார் என்று கூறியுள்ளது.

பயணி ஒருவரிடம் விமானத்தின் பொறுப்பை ஒப்படைக்க விமானி எடுத்த முடிவுதான் விபத்திற்கான காரணம் என்று அது கூறியுள்ளதோடு, அந்த விமானி விமானம் ஓட்ட பயிற்சியளிப்பவரும் அல்ல என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்