சுவிஸில் துப்பாக்கி முனையில் கொள்ளையிட்டு சென்ற முகமூடி மனிதர்: எச்சரிக்கை விடுத்த பொலிஸ்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் சூரிச் மண்டலத்தில் முகமூடி அணிந்த நபர் ஒருவர் கடைக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் கொள்ளையிட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bonstetten கிராமத்தில் சனிக்கிழமை பகல் 7.20 மணியளவில் இந்த துணிகர கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது.

திடீரென்று கடைக்குள் புகுந்த முகமூடி மனிதர் துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார். பின்னர் பல ஆயிரம் பிராங்குகளை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு, மண்டல பொலிசார் மேற்கொண்ட துரித நடவடிக்கை பலனளிக்கவில்லை என கூறப்படுகிரது.

இதனையடுத்து குறித்த சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் பொலிசாருக்கு உதவ வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

20-ல் இருந்து 30 வயதுக்குள் பிராயம் கொண்ட அந்த முகமூடி மனிதர் சுமார் 1.70 முதல் 1.75 மீற்றர் உயரம் கொண்டவர் எனவும்,

வெள்ளை நிறம் கொண்டவர் எனவும், ஜேர்மன் கலந்த சுவிஸ் மொழி பேசுபவராகவும் உள்ளார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தகவல் தெரியவரும் பொதுமக்கள் மண்டல பொலிசாரை அணுக வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers