சுவிஸில் பொதுமக்கள் வரிப்பணத்தில் ஆபாச வலைதளம்: வெளியான பின்னணி தகவல்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் தனியார் அமைப்பு சார்பில் செயல்படும் ஆபாச வலைதளத்திற்கு பொதுமக்கள் வரிப்பணத்தில் இருந்து நிதியுதவி அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுவிஸில் பிரஞ்சு மொழி பேசும் பகுதிகளில் பாலியல் தொழிலாளிகளின் உரிமைக்காக போராடி வருகிறது Aspasie என்ற அமைப்பு.

பாலியல் நோய்கள், பாலியல் தொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு எதிராக விழிப்புணர்வும் மேற்கொண்டு வருகின்றது.

குறித்த அமைப்புடன் இணைந்து Fleur de Pavé என்ற அமைப்பும் ஒன்றாக பாலியல் தொழிலாளர்களுக்கான இணைய தளம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இந்த இணையதளத்திற்கு சுவிஸ் அரசாங்கம் பொதுமக்கள் வரிப்பணத்தில் இருந்து நிதியுதவி வழங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

2018 ஆம் ஆண்டு மட்டும் Aspasie அமைப்பு பொலிஸ் துறையிடம் இருந்து சுமார் 45,600 பிராங்குகள் நிதியுதவி பெற்றுள்ளது.

மட்டுமின்றி பொது சுகாதார துறையிடம் இருந்து சுமார் 300,000 பிராங்குகள் அளவுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த தகவல் பரவலாக விவாதமான நிலையில் பொது சுகாதார துறை அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

Aspasie அமைப்பின் பாலியல் வலை தளத்தில் வன்முறைக்கு எதிராகவும், பாலியல் தொழிலாளர்கள் உதவி பெறுவது எவ்வாறு என்பது தொடர்பிலும் பிரத்யேக பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது எனவும், இதனால் பொது சுகாதார துறை நிதி அளிப்பது தவறில்லை என விளக்கமளித்துள்ளது.

குறித்த வலை தளத்தில் பாலியல் தொழிலாளர்கள் தங்கள் புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை பதிவேற்றம் செய்யலாம் எனவும்,

பொதுமக்களுக்கு உதவும் வகையிலும் வாடிக்கையாளர்களின் நலன் கருதியும் பல்வேறு பயனுள்ள குறிப்புகள் இடம்பெற செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வலை தளத்தை சுவிட்சர்லாந்தில் ஜேர்மன் மொழி பேசும் பகுதிகளுக்கும் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers