வெளிநாட்டில் சுவிஸ் பெண்மணி மீது துப்பாக்கிச் சூடு: வெளியான பின்னணி தகவல்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

மெக்ஸிகோ நாட்டில் வணிக வளாகம் ஒன்றில் சுவிஸ் பெண்மணி மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு மாயமான பொலிஸ் காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மெக்ஸிகோ நாட்டின் Tlalnepantla நகரில் குறித்த பதபதைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

சம்பவத்தின்போது குறித்த சுவிஸ் பெண்மணியை மர்ம நபர் ஒருவர் ஆயுதம் காட்டி கொள்ளையிட முயன்றுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார், அந்த வளாகத்தின் அருகாமையில் துப்பாக்கி குண்டு காயத்துடன் சுவிஸ் பெண்மணி ஒருவரை மீட்டுள்ளனர்.

அவர் அளித்த தகவலின் அடிப்படையில் பொலிசார் குறித்த கொள்ளையனை கைது செய்துள்ளனர்.

பொலிஸ் அதிகாரி வேடத்தில் இருந்த அந்த நபரை கைது செய்துள்ள பொலிசார், அவரிடம் இருந்து போலி அடையாள அட்டைகளும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

கைதான நபருக்கு 63 வயதிருக்கலாம் எனவும் அவர் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

குண்டடிப்பட்ட சுவிஸ் பெண்மணிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த பெண்மணி மெக்ஸிகோவில் குடியிருக்கிறாரா அல்லது சுற்றுலா சென்றாரா என்பது தொடர்பான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

குறித்த தாக்குதலில் அவரது உயிருக்கு ஆபத்தில்லை என மருத்துவமனை தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers