சுவிஸ் ராணுவ வீரரால் சீரழிக்கப்பட்ட அகதிச் சிறுவன்: விசாரணையில் வெளியான பகீர் தகவல்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் அகதிச் சிறுவனை கொடூரமாக கொலை செய்த வழக்கில் சிறையில் இருக்கும் ராணுவ வீரரை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

குறித்த நபருக்கு அளிக்கப்பட்டு வரும் சிறப்பு சிகிச்சை தொடர்பில் நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.

கடந்த 2004 ஆம் ஆண்டு ரால்ஃப் என்பவரும் அவரது நண்பரும் இணைந்து ஆபாச வலைதளம் ஒன்றில் சந்தித்த சிறுவன் ஒருவனை பணத்திற்காக பாலியல் உறவுக்கு அழைத்துள்ளனர்.

இருவரும் சிறுவனுடன் உறவு கொண்ட நிலையில், ரால்ஃப் அந்த 15 வயது சிறுவனை கொடூரமாக சித்திரவைதைக்கு உட்படுத்தியுள்ளார்.

மட்டுமின்றி சிறுவனின் கழுத்தை நெரித்தும் கத்தியால் 30 முறை குத்தியும் கொலை செய்துள்ளார்.

சம்பவம் நடந்த காகட்டத்தில் ரால்ஃப் ராணுவத்தில் பயிற்சி பெற்று வந்துள்ளார். ஆபாச இணையத்தில் சிக்கிய அந்த 15 வயது சிறுவன் துருக்கி நாட்டவர் எனவும் தெரிய வந்தது.

இந்த விவகாரம் தொடர்பில் நீண்ட விசாரணைக்கு பின்னர் பெர்ன் மண்டல பொலிசாரால் ரால்ஃப் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து நடந்த விசாரணையின் முடிவில் 2006 ஆம் ஆண்டு ரால்ஃப் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

தற்போது 47 வயதாகும் ரால்ஃப், தம்மால் பாலியல் உணர்வுகளை இன்றளவும் கட்டுப்படுத்த முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி சிறார்களை கொடூரமான பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்துவதான எண்ணங்களே ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் கடந்த வியாழனன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரால்ஃப் மீது மீண்டும் விளக்கம் கேட்கப்பட்டது.

அதில் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் முன்னேற்றம் இருப்பதாகவும், ஆபத்தானவர் அல்ல எனவும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மட்டுமின்றி அவரது நோயானது சிகிச்சையால் குணப்படுத்த முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers