நோயாளியின் இரத்தத்தை கொண்டு சென்ற ட்ரோன்: ஏரியில் விழுந்ததால் பரபரப்பு

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

மருத்துவமனைகளுக்கும் பரிசோதனைச்சாலைகளுக்கும் ட்ரோன்கள் மூலம் பொருட்களை சப்ளை செய்வதில் முன்னோடியாக விளங்கும் நாடு சுவிட்சர்லாந்து.

இந்நிலையில் ஒரு நோயாளியின் இரத்தத்தைக் கொண்டு சென்ற ட்ரோன் ஒன்று, சூரிச் ஏரியில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ட்ரோன் விழுந்ததில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், ஆழ்கடல் நீச்சல் வீரர்களால் கூட ஏரியில் விழுந்த ட்ரோனை மீட்க முடியவில்லை.

ட்ரோன் எதனால் திடீரென தண்ணீரில் விழுந்தது என்பதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

மருத்துவமனை ஒன்றிலிருந்து பரிசோதனைச்சாலைக்கு ஒரு இரத்த மாதிரிகொண்டு செல்லப்பட்டபோது இந்த சம்பவம் நடைபெற்றது.

எதனால் இந்த விபத்து நடந்தது என்று கண்டுபிடிக்கும் வரை, லுகானோவிற்கும் சூரிச் பல்கலைக்கழக மருத்துவமனைக்கும் இடையே இயக்கப்படும் ட்ரோன் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக சுவிஸ் தபால்துறை தெரிவித்துள்ளது.

ட்ரோன் போக்குவரத்தால், இரத்த மாதிரிகளை எடுத்துச் செல்லும் நேரம் வெகுவாக குறைவதால், மயக்க மருந்து கொடுக்கப்பட்டு மயக்க நிலையில் இருக்கும் ஒரு நோயாளிக்கு இரத்தம் கொண்டு சேர்ப்பது போன்ற சம்பவங்களில் அது உயிர் காக்க உதவும் ஒரு சேவையாக அமைகிறது.

இதனால் இந்த துறையில் மற்ற நாடுகளுக்கு சுவிட்சர்லாந்து முன்மாதிரியாக இருப்பதாக உலக பொருளாதார அமைப்பினால் பாராட்டு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers