மனைவியை 56 முறை கத்தியால் தாக்கி கொலை செய்த கணவர்: மகள் அளித்த முக்கிய வாக்குமூலம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் குடும்ப தகராறு காரணமாக நபர் ஒருவர் தமது மனைவியை 56 முறை கத்தியால் தாக்கி கொலை செய்த வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

சுவிஸின் பெடரல் உச்ச நீதிமன்றம் குறித்த ஆப்கான் நாட்டவருக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

திங்களன்று வெளியான தீர்ப்பில், ஆர்காவ் மண்டல நீதிமன்றம் இந்த வழக்கை உரிய முறையில் விசாரணை நடத்தியுள்ளதாகவும் பெடரல் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

மட்டுமின்றி 10 ஆண்டுகள் வரை தண்டனை வழங்க கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளதுடன் மேல்முறையீடு செய்யப்பட்டதையும் நிராகரித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் குறித்த 44 வயதான ஆப்கான் நாட்டவர் நம்பத்தகுந்த எந்த காரணத்தையும் நீதிமன்ற விசாரணையில் தெரிவிக்கவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

மட்டுமின்றி இது திட்டமிட்ட கொலை அல்ல எனவும் உணர்ச்சி மிகுதியால் நடந்திருக்கலாம் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஆப்கான் நாட்டவரான 30 வயது பெண்மணியை அவரது கணவர் படுகொலை செய்துள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் இடையே குறித்த நபர் தமது மனைவியை கொடூரமாக தாக்கியுள்ளார்.

இதில் உயிர் பயத்தில் அலறிய அவர் வீட்டு தோட்டத்திற்கு ஓடியுள்ளார். ஆனால் துரத்திச் சென்ற அவர் கணவர் தோட்டத்தில் வைத்து தம்மிடம் இருந்த கத்தியால் 56 முறை சரமாரியாக தக்கியுள்ளார்.

இதில் ரத்தவெள்ளத்தில் சரிந்த அந்த பெண்மணி, சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ளார். சம்பவத்தின்போது குறித்த தம்பதிகளின் 3 பிள்ளைகள் பாடசாலைக்கு சென்றிருந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பில் அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகளிடம், அந்த தம்பதிகளின் மகள் முக்கிய வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதில், தமது பெற்றோர் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாகவும், தமது தந்தை எப்போதும் தாயாரை கொடூரமாக தாக்கி வந்ததாகவும் அவர்களது மகள் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers