சுவிட்சர்லாந்தில் பாதிப்பேர் திருடுகிறார்களாம்: ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

வேலை செய்யும் இடமானாலும் சரி, ஹோட்டலானாலும் சரி, பேருந்தானாலும் சரி, கடையானாலும் சரி, சுவிட்சர்லாந்து மக்களில் பாதிப்பேர் திருடுவதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1,500 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 48 சதவிகிதம்பேர், தாங்கள் பார்க்கும் பொருட்களை யாருக்கும் தெரியாமல் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு விடுவதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.

அதிகம் திருடுவது இளைஞர்கள்தானாம். 18 முதல் 25 வயதுக்குட்பட்டோரில் ஐந்தில் ஒரு பங்கு சூப்பர் மார்க்கெட்டிலிருந்து எதையாவது திருடிக்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர். பெரியவர்களில் இந்த எண்ணிக்கை குறைவு.

சூப்பர் மார்க்கெட்களில் வழக்கமாக திருடுவதாக 1 சதவிகிதத்தினர் ஒப்புக் கொண்டுள்ளனர்.

டிக்கெட் இல்லாமல் பயணிப்பதும் சர்வசாதாரணமாக காணப்படுகிறது. பெரியவர்களில் 34 சதவிகிதம்பேர் ஒரு முறையாவது டிக்கெட் இல்லாமல் பயணித்துள்ளதை ஒப்புக் கொண்டுள்ள நிலையில், 18 முதல் 25 வயதுக்குட்பட்டோரில் 48 சதவிகிதம் பேர் டிக்கெட் எடுக்காமல் பயணிக்கின்றனர்.

வேலைத்தலங்களில் 18 சதவிகிதத்தினரும், ஹோட்டல்களில் 13 சதவிகிதத்தினரும் ஏமாற்றியுள்ளனர்.

16 சதவிகிதம் ஆண்களும், 11 சதவிகிதம் பெண்களும், ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வேண்டுமென்றே பணம் கொடுக்காமல் போய்விடுகின்றனராம். உடைகள் மற்றும் மின்னணு உபகரணங்களில் திருட்டு வீதம் குறைவுதான் (5 முதல் 6 சதவிகிதம்).

ஆண்களை விட (52%) பெண்கள் (46%) குறைவாகவே திருடுவதை ஒப்புக் கொண்டுள்ளனர். பிரெஞ்சு மொழி பேசும் சுவிஸ் மக்கள் 47 சதவிகிதத்தினரும், ஜேர்மன் மொழி பேசும் சுவிஸ் மக்கள் 50 சதவிகிதத்தினரும் திருடுவதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.

நகரத்திலுள்ளவர்களைவிட (51%) கிராமத்திலுள்ளவர்கள் (45%)குறைவாகவே திருடுகிறார்களாம்.

எப்படியோ, இந்த ஆய்வு வெளியானதும், கடைக்காரர்கள் இனி எல்லோரையும் சந்தேகக் கண்களோடுதான் பார்க்கப்போகிறார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

அத்துடன், CCTV கெமராக்களின் விற்பனையும் சூடு பிடிக்கப்போகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers