ஆம்புலன்ஸ் வாகனத்தில் சிதைந்த முகத்தை பார்த்தேன்: விபத்தில் சிக்கி உருக்குலைந்த இளம்பெண்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் வோட் மண்டலத்தில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் விபத்தில் சிக்கி உருக்குலைந்த இளம்பெண் ஒருவர் நடந்த நிகழ்வுகளை நினைவுகூர்ந்துள்ளார்.

வோட் மண்டலத்தின் Villeneuve பகுதியில் அமைந்துள்ள Funplanet பொழுதுபோக்கு பூங்காவில் கடந்த 2013 ஆம் ஆண்டு குறித்த சம்பவம் நடந்துள்ளது.

அப்போது 15 வயதான Adelina-ன் வாழ்க்கை அந்த ஜூன் 18 ஆம் திகதி முற்றாக மாற்றியுள்ளது அச்சம்பவம்.

பாடசாலையின் கடைசி நாள் என்பதால் சக மாணவர்களுடன் Adelina அந்த பொழுதுபோக்கு பூங்காவிற்கு சென்றுள்ளார்.

அதுவரை ஒருமுறை கூட கார்ட் எனப்படும் சிறிய ரக பந்தய வாகனத்தை செலுத்தியிராத Adelina,

நண்பர்களின் நிர்பந்தத்திற்கு கட்டுப்பட்டு கார்ட் எனப்படும் அந்த வாகனம் ஒன்றை செலுத்தியுள்ளார்.

Adelina முதன்முதலில் கவனித்தது, தமது ஹெல்மட்டானது முகமூடி இல்லாதது என்பதே.

ஆனால் அது குறித்து கவலை கொள்ளாத Adelina கார்ட்டில் அமர்ந்து அதை செலுத்த துவங்கியுள்ளார்.

இந்த நிலையிலேயே சக மாணவி ஒருவரின் கார்ட் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் பலமாக மோதியுள்ளது. அப்போது Adelinaவின் கார்ட் மணிக்கு 24.5 கி.மீ வேகத்தில் சென்றுகொண்டிருந்தது.

இதில் நிலை தடுமாறிய Adelina விபத்துக்குள்ளான கார்ட் மீது பலமாக மோதியுள்ளார். இதனால் அவரது முகம் சிதைந்துள்ளது.

உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் வரும் வரையில் காத்திருக்காத பொழுதுபோக்கு பூங்கா ஊழியர்கள் அவரை கார்ட்டில் இருந்து வெளியே இழுத்து தரையில் கிடத்தியுள்ளனர்.

இதனிடையே ஆம்புலன்ஸ் வாகனமும் பொலிசாரும் சம்பவப்பகுதிக்கு விரைந்து வந்துள்ளனர்.

மருத்துவமனையில் வைத்து சிதைந்த தனது முகத்தை பார்த்ததும் வலியின் தாக்கம் அதிகரித்ததாக கூறும் Adelina,

நீண்ட 5 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அந்த விபத்து ஏற்படுத்திய வலி இப்போதும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே அந்த பொழுதுபோக்கு பூங்கா மீது Adelina குடும்பம் வழக்கு தொடுத்துள்ளது.

ஐந்தரை ஆண்டுகள் கடந்த பின்னரும் இதுவரை வழக்கு விசாரணை முடிவடையாத நிலையில், இந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்திற்கு முன்னர் விசாரணையை முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers