குடும்ப கட்டுப்பாடு தொடர்பில் சுவிஸ் சபைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிஸ் கத்தோலிக்க சபை ஒன்று குடும்ப கட்டுப்பாடு தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் மையத்திற்கு உதவி செய்வதை நிறுத்தக்கூடாது என நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

கருத்தடை போன்ற விடயங்கள் தங்கள் கொள்கைகளுக்கு மாறானவை என கருதும் கத்தோலிக்க சபை, தங்களிடமிருந்து பெறப்படும் நிதி, குடும்ப கட்டுப்பாடு தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் மையத்திற்கு கொடுக்கப்படக்கூடாது என வழக்கு தொடர்ந்திருந்தது.

கீழ் நீதிமன்றங்கள் சபையின் கோரிக்கையை நிராகரித்த நிலையில், கத்தோலிக்கத் திருச்சபை ஃபெடரல் நீதிமன்றத்திற்கு வழக்கைக் கொண்டு சென்றது.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த ஃபெடரல் நீதிமன்றம், குடும்ப கட்டுப்பாடு தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் மையத்திற்கு உதவுவது, சபை சட்டங்களையோ மத சுதந்திரத்தையோ மீறுவதாகாது என தீர்ப்பளித்து, தொடந்து அதற்கு நிதியுதவி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இந்த நிதி ரோமன் கத்தோலிக்க சபையிலிருந்து வரவில்லை, அது கத்தோலிக்கர்கள் வாழும் உள்ளூர் சமுதாயத்திலிருந்து வருகிறது என நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுவிட்சர்லாந்தில் தேசிய அளவில் அங்கீகாரம் பெற்ற மதங்கள் தொடர்பில், வரிகளை அதிகாரிகள் வசூலிக்கின்றனர்.

பின்னர் உள்ளூர் சபைப் பிரிவு, அந்த பணத்தை என்ன செய்வது என தீர்மானிக்கிறது. எனவே, அந்த அடிப்படையில், கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்த வரி செலுத்துவோர், தங்கள் நிதி, சபைக்கு விரோதமான நடவடிக்கைகள் அல்லாத செயல்களுக்கு செலவிடப்படுவதை எதிர்பார்ப்பதில் என்ன தவறு என கேட்கின்றது திருச்சபை.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers