பிறந்த குழந்தைக்கு மூளையில் பாதிப்பு: மருத்துவமனை மீது வழக்குத் தொடுத்த பெற்றோர்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில், பிறந்த குழந்தைக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து பெற்றோர் மருத்துவமனை மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் பிறந்த குழந்தைக்கு மருத்துவர்களின் அலட்சியத்தால் மூளையில் பாதிப்பு ஏற்பட்ட சம்பவம் பெற்றோரை உலுக்கியுள்ளது.

குறித்த சம்பவத்திற்கு காரணமான மருத்துவமனை மீது அந்த தம்பதிகள் வழக்குத் தொடுத்துள்ளனர்.

பைல் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் 35 வயதான நடாலி என்பவர் மகப்பேறுக்காக அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் திகதி நடாலிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

ஆனல் பிறந்த குழந்தை ஒருமுறை கூட அழவில்லை என்பதை நடாலி கவனித்துள்ளார். மட்டுமின்றி குழந்தையின் உடல் நிறமும் மாறத்துவங்கியுள்ளது.

தொடர்ந்து சிறப்பு சிகிச்சைக்காக குழந்தையை வேறு பகுதிக்கு மருத்துவர்கள் மாற்றியுள்ளனர்.

மேலும் கவலை கொள்ள தேவையில்லை எனவும், துவக்கத்தில் ஏற்படும் சிறு சிக்கலே இது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் குழந்தையின் நிலை கவலை அளிக்கும் வகையிலேயே நீடித்து வந்துள்ளது. தொடர்ந்து வேறு மருத்துவமனைக்கு குழந்தையை சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் அடுத்தடுத்த மாதங்களில் குழந்தையின் நடவடிக்கையில் மாறுதல் இருப்பதை உணர்ந்துள்ளனர்.

அதுவும் குழந்தையின் பெற்றோருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. மட்டுமின்றி மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் குழந்தைக்கு பெருமூளை இயக்க சீர்குலைவு இருப்பதை உறுதி செய்துள்ளனர்.

இது குழந்தை பிறந்த சில மணி நேரத்தில் கண்காணிக்க வேண்டிய செவிலியரால் ஏற்பட்டது எனவும் உறுதியானது.

குழந்தைக்கு போதிய ஆக்சிஜன் இல்லாமல் பல மணி நேரம் தவித்துள்ளதாகவும் மருத்துவ அறிக்கையில் இருந்து தெரியவந்தது.

இதனையடுத்து மருத்துவ அறிக்கையை சுட்டிக்காட்டிய நடாலி குடும்பத்தார் தற்போது குறித்த மருத்துவமனை மீது வழக்குத் தொடுத்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers