பெண் நோயாளிகளுடன் உல்லாசம்... சிகிச்சையின் ஒரு பகுதி என நம்ப வைத்த கொடூரம்: அம்பலமான உளவியல் மருத்துவர்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் உளவியல் மருத்துவர் ஒருவர் நோயாளிகளை மிரட்டி பாலியல் உறவு வைத்துக் கொண்ட சம்பவம் புயலை கிளப்பியுள்ளது.

குறித்த மருத்துவரிடம் பல பெண் நோயாளிகள் சிக்கியுள்ளதும் அம்பலமாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் ஆர்காவ் மண்டலத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு ரூத் என்ற பெண் உளவியல் சிகிச்சைக்காக ரால்ப் கன்ஸ் என்ற மருத்துவரை நாடியுள்ளார்.

சிறு வயதில் தமக்கு ஏற்பட்ட பாலியல் துஸ்பிரயோக நினைவுகளில் இருந்து தமக்கு விடுதலை வேண்டும் எனவும், புதிய வாழ்க்கை மேற்கொள்ள அது தடையாக உள்ளது எனவும் கூறி அந்த மருத்துவரை சமீபித்துள்ளார்.

ஆனால் மருட்த்துவர் ரால்ப் கன்ஸ் அந்த நோயாளியின் பின்னணியை சாதகமாக பயன்படுத்தி அவரை மீண்டும் பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.

பல முறை சிகிச்சையின் ஒரு பகுதி என கூறி உடல் உறவும் வைத்துக் கொண்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் மருத்துவர் ரால்ப் கன்சின் நடவடிக்கை அத்துமீறுவதை உணர்ந்த ரூத், ஆர்காவ் மண்டல முதன்மை மருத்துவர் மார்ட்டின் ரோத் என்பவரிடம் நடந்த சம்பவங்களை குறிப்பிட்டு புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து மார்ட்டின் ரோத் குறித்த உளவியல் மருத்துவரிடம் காரணம் தெரிவித்து அறிக்கை கேட்டுள்ளார்.

அதில், மருத்துவர் ரால்ப் கன்ஸ் தெரியப்படுத்திய காரணங்கள் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் போனது.

ஆனால், இதனால் மனம் தளராத ரூத், நாளேடு ஒன்றில் விளம்பரம் மேற்கொண்டுள்ளார். இது நீதிமன்றம் தலையிடும் நிலைக்கு கொண்டு சென்றது.

தற்போது உளவியல் மருத்துவர் ரால்ப் கன்ஸ் மேற்கொண்ட விசித்திர சிகிச்சைகள் நீதிமன்றத்தில் அம்பலமாகியுள்ளது.

இருப்பினும் துறை ரீதியாக மருத்துவர் ரால்ப் கன்ஸ் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்