சுவிஸ் சிறைகளில் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

கடந்த 30 ஆண்டுகளில் சுவிஸ் சிறைகளில் உள்ளூர் குற்றவாளிகளின் எண்ணிக்கை சரிவடைந்துள்ள நிலையில் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரியவந்துள்ளன.

சுவிட்சர்லாந்தில் கடந்த 1988 முதல் 2017 ஆம் ஆண்டு வரையான காலகட்டத்தில் நீதிமன்றங்களின் எண்ணிக்கை 30 சதவிகிதம் சரிவடைந்துள்ள நிலையில், கைதிகளின் எண்ணிக்கை 50 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் சுவிட்சர்லாந்தில் உள்ள சிறைக் கைதிகளில் பெரும்பாலானோர் வெளிநாட்டவர்கள் எனவும் கூறப்படுகிறது.

1988 ஆம் ஆண்டு காலகட்டத்தில் 100,000 பேருக்கு சுமார் 70 பேர் சிறைக் கைதிகளாக இருந்துள்ளனர்.

ஆனால் 2017 ஆம் ஆண்டு காலகட்டத்தில் அது 82 என அதிகரித்துள்ளது. அதாவது 4,621 என இருந்த கைதிகளின் எண்ணிக்கை தற்போது 6,907 என அதிகரித்துள்ளது.

கடந்த 30 ஆண்டுகளில் அகதிகள் உள்ளிட்ட சுவிஸ் குடியுரிமை பெறாத கைதிகளின் எண்ணிக்கையானது 28 சதவிகிதத்தில் இருந்து 37 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers