சுவிட்சர்லாந்தில் ரயில்வே டிராக்கில் பணியாற்றிக் கொண்டிருந்த நபர் ஒருவர் ரயில் மோதி பரிதாபமாக பலியான சம்பவம் நடந்துள்ளது.
கடந்த 5ம் திகதி உள்ளுர் நேரப்படி காலை 9 மணியளவில் Ticino மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்ததாக தெரிகிறது.
Tilo என்ற ரயில் 5 பயணிகளுடன் Ertsfeld நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது, ரயில்வே டிராக்கில் பணியாற்றிக் கொண்டிருந்த இருவர் மீது மோதியுள்ளது.
இதில் 40 வயது மதிக்கத்தக்க நபர் இறக்க, 39 வயது நபர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தகவலறிந்து விரைந்து சென்ற பொலிசார், வழக்கு பதிவு செய்ததுடன் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.