சுவிட்சர்லாந்தில் கோழிக்குஞ்சுகளை ஈவிரக்கமின்றி கொல்லும் முறை: ஒரு அதிர்ச்சி வீடியோ

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

பெட்டைக்கோழிகள் முட்டை கொடுக்கும் என்பதால் அவற்றை மட்டும் விட்டு விட்டு சேவல் குஞ்சுகளை ஈவிரக்கம் இன்றி கொல்லும் செயல்முறை ஒன்று சுவிட்சர்லாந்தில் நடைமுறையில் உள்ளது.

தற்போது அந்த செயல் முறைக்கு சுவிட்சர்லாந்தில் தடை விதிக்கப்பட இருக்கிறது. அந்த சேவல் குஞ்சுகள் ஒரு இயந்திரத்தின் உதவியால் உயிருடன் அரைத்து கொல்லபடுகின்றன.

இந்த கோர செயல்முறை maceration என்று அழைக்கப்படுகிறது. சுவிட்சர்லாந்திலுள்ள விலங்குகள் நல அமைப்பினர் இந்த முறைக்கு ஒரு முடிவு கொண்டுவரப்பட வேண்டும் என விரும்புகின்றனர்.

சமீபத்தில் நாடாளுமன்ற கமிஷன் ஒன்று 13க்கு 7 என்ற விகிதாசாரத்தில் சேவல் குஞ்சுகள் உயிருடன் அரைத்துக் கொல்லப்படும் முறைக்கு தடை விதிப்பதற்கு ஆதரவாக வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers