அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குதித்த சுவிஸ் நாட்டவர்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் சுவிஸ் நாட்டவரான ஆமி குளோபுச்சார் களமிறங்க உள்ளதாக உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி செனட்டரான ஆமி குளோபுச்சார் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க உள்ளார்.

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தை சேர்ந்த 58 வயதான செனட்டர் ஆமியின் பூர்வீகம் சுவிட்சர்லாந்து என தெரியவந்துள்ளது.

முன்னாள் வழக்கறிஞரான ஆமி பிரபலமானவரும் ஜனநாயக கட்சியில் சிறந்த செயற்பாட்டாளர் எனவும் கூறப்படுகிறது.

மினசோட்டா மாகாணத்தில் இருந்து கடந்த 3 முறையாக தொடர்ந்து செனட்டராக தெரிவாகி வந்துள்ளார் ஆமி.

கடும் பனிப்பொழிவின் இடையே திரளாக திரண்ட தமது ஆதரவாளர்களை வரவேற்று பேசிய ஆமி, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் வேட்பாளராக களம் காண இருப்பதை அறிவித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers