Brexit தொடர்பில் பிரித்தானிய குடிமக்களுக்காக சுவிட்சர்லாந்து வெளியிட்டுள்ள அறிவிப்பு

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

ஒப்பந்தங்கள் எதுவுமின்றி பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் நிலையில், கனடா, ஜப்பான் போன்ற நாடுகளைப்போலவே சுவிட்சர்லாந்தில் பணிபுரிய விரும்பும் பிரித்தானியக் குடிமக்களுக்கும் இனி இட ஒதுக்கீடு வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.

நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில், மார்ச் இறுதியில், பிரித்தானியா ஒப்பந்தங்கள் எதுவுமின்றி ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுமானால், 2019ஆம் ஆண்டுக்காக பிரித்தானியர்களுக்கு 3,500 இடங்களை சுவிட்சர்லாந்து ஒதுக்கீடு செய்துள்ளது.

இதுவரை பிரித்தானியர்கள் சுவிட்சர்லாந்தில் எந்த தடையுமின்றி பணிபுரியும் நிலை இருந்து வருகிறது.

2017ஆம் ஆண்டைப் பொருத்தவரையில் சுமார் 40,000 பிரித்தானியர்கள் சுவிட்சர்லாந்தை தங்கள் நாடு என்று அழைத்தனர்.

இன்னொரு முக்கிய விடயம், இந்த இட ஒதுக்கீடு, புதிதாக சுவிர்சர்லாந்துக்கு வரும் பிரித்தானியர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers