சுவிஸ் பெண்மணி கொலை வழக்கில் குரோஷிய நாட்டவர் கைது: வெளியான தகவல்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் ஆராவ் நகரில் 66 வயது பெண்மணி கொலை வழக்கில் குரோஷிய நாட்டவரை மண்டல பொலிசார் கைது செய்துள்ளனர்.

குறித்த கொலை குற்றத்தை அந்த நபர் மறுத்துள்ள நிலையில் பொலிசார் விசாரணைக்கு பின்னர் உண்மை வெளிவரும் என தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் 17 ஆம் திகதி ஆராவ் நகரில் 66 வயதான Hildegard Enz Rivola என்பவர் கொடூரமான முறையில் கத்தியால் தாக்கப்பட்டு குற்றுயிராக மீட்கப்பட்டார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் வைத்து அவர் மரணமடைந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக தீவிர விசாரணையில் ஈடுபட்டுவந்த பொலிசார் கடந்த செவ்வாய் அன்று 28 வயதான குரோஷிய நாட்டவரை கைது செய்துள்ளனர்.

தமது சகோதரர் மற்றும் குடும்பத்தாருடன் வசித்துவரும் அந்த குரோஷிய இளைஞர், நிரந்தரமான வேலை இன்றி தவித்து வந்ததாக கூறப்படுகிறது.

மட்டுமின்றி அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வேலையிலும் இருந்து வருகின்றனர்.

மேலும், இவர் மதுவுக்கும் போதை மருந்துக்கும் அடிமையானவர் எனவும், அதற்கான சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

குறித்த 66 வயது பெண்மணியை இவர் ஏன் கொலை செய்தார் என்பது தொடர்பில் பொலிஸ் விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என கூறப்படுகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்