பிரபல நடிகர் சுவிட்சர்லாந்து நகரில் மரணம்

Report Print Raju Raju in சுவிற்சர்லாந்து

பிரபல சுவிஸ் நடிகர் புருனோ கன்ஸ் தனது 77வது வயதில் காலமானார்.

மேடை நாடகங்களில் தனது கலைப்பயணத்தை தொடங்கிய புருனோ கடந்த 1970ஆம் ஆண்டு திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.

Nosferatu, Wenders, The American Friend போன்ற திரைப்படங்களில் புருனோவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

முக்கியமாக, சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் வேடத்தில் புருனோ நடித்த Downfall என்ற திரைப்படம் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.

இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக ஜூரிச் நகரில் புருனோ உயிரிழந்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்