உறைந்து போன ஏரி... 30 நிமிடங்கள் உயிருக்கு போராடிய நாய்: பதற வைக்கும் சம்பவம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் பாதி உறைந்து போன ஏரியில் தவறி விழுந்த நாய் ஒன்று சுமார் 30 நிமிடங்கள் உயிருக்கு போராடிய சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் Thuner Lachenkanal ஏரியில் கடந்த வெள்ளியன்று இச்சம்பவம் நடந்துள்ளது.

பெர்னீஸ் வகை நாய் ஒன்று உறைந்து போன ஏரி மீது நடந்து சென்றுள்ளது. ஆனால் சில அடி தூரம் சென்றிருக்கும், திடீரென்று அந்த நாயின் கால்கள் அந்த பனிப்பிரதேசத்தில் சிக்கியுள்ளது.

இதனால் அந்த நாய் அமிழ்ந்துபோகும் நிலைக்கு தள்ளப்பட்டது. நாயின் உரிமையாளர் பதற்றத்துடன் அதை மீட்கும் நடவடிக்கையில் தனித்து களமிறங்கியுள்ளார்.

ஆனால் பாதி மட்டுமே உறைந்த நிலையில் காணப்படும் அந்த ஏரியில் இருந்து அவரால் நாயை மீட்க முடியவில்லை.

இதனிடையே சிறு படகு ஒன்றில் நாயை மீட்கலாம் என ஒருவர் களமிறங்கியுள்ளார். ஆனால் நாயின் பாரம் தாங்காமல் அந்த சிறு படகு மூழ்கும் நிலைக்கு சென்றது.

இந்த நிலையில் Thun தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து வந்து படகு மூலம் நாயை மீட்டுள்ளனர்.

தொடர்ந்து அந்த நாய்க்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், குளிர் போக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து அருகாமையில் உள்ள மிருகங்களுக்கான மருத்துவமனைக்கு நாயை எடுத்துச் சென்றுள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்