சுவிட்சர்லாந்துக்கு கடத்திவரப்பட்ட உணவு பண்டங்கள்: வெளிநாட்டவர்கள் 12 பேர் சிக்கலில்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

ஜேர்மனியை சேர்ந்த வணிகர்கள் சிலர் சட்டவிரோதமாக உணவு பண்டங்களை சுவிட்சர்லாந்துக்கு கடத்திவந்து மலிவு விலையில் விற்பனை செய்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சுமார் 200 முறை குறித்த நபர்கள் உணவு கடத்தலில் ஈடுபட்டுள்ளனர்.

பெரும்பாலும் மாமிச உணவுகளை கடத்திவந்த இந்த கும்பல் சுவிஸ் பொதுமக்களுக்கு மலிவு விலையில் விற்பனை செய்துள்ளனர்.

இதுவரை இவர்கள் 12 பேரும் சுமார் 40 டன் அளவுக்கு உணவுகளை கடத்தி வந்துள்ளது அம்பலமாகியுள்ளது.

மட்டுமின்றி சுவிட்சர்லாந்தின் 5 மண்டலங்களில் உள்ள 12 வணிகர்கள் இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் மேற்கொண்ட கடத்தல் செயலால் சுவிஸ் அரசாங்கத்திற்கு சுமார் 400,000 பிராங்குகள் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது அந்த 12 வணிகர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும்,

அரசாங்கத்திற்கு ஏற்பட்ட வரி இழப்பை குறித்த 12 நபர்களும் திருப்பி செலுத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்