சவுதியின் மனித உரிமை மீறலை கண்டிக்க மறுக்கும் சுவிட்சர்லாந்து

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சவுதி அரேபியாவில் நடக்கும் மனித உரிமைகள் மீறலை கண்டிக்கும் அறிக்கை ஒன்றில் கையெழுத்திட சுவிட்சர்லாந்து மறுத்துள்ளது.

ஜெனீவாவில் கூடியுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சிலில் சவுதியில் மகளிர் உரிமை ஆர்வலர்கள் சிறையிலடைக்கப்பட்டதைக் கண்டித்தும், பத்திரிகையாளர் ஜமாலின் மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஐக்கிய நாடுகளுடன் சவுதியை ஒத்துழைக்கக்கோரியும் உருவாக்கப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் ஐரோப்பிய ஒன்றியத்தின் 28 உறுப்பு நாடுகளும் அவுஸ்திரேலியாவும் நியூசிலாந்தும்கூட கையெழுத்திட்டுள்ளன.

ஆனால் அந்த அறிக்கையில் கையெழுத்திட சுவிட்சர்லாந்து மறுத்து விட்டது.

சுவிஸ் சார்பில் பேசிய செய்தி தொடர்பாளர் ஒருவர், சுவிட்சர்லாந்து அந்த அறிக்கையில் கையெழுத்திடாததற்குக் காரணம் அத்துடன் சுவிட்சர்லாந்து ஒத்துப்போகவில்லை என்பதனால் அல்ல, அது ஏற்கனவே தனது கருத்தை தெரிவித்து விட்டது என்பதால்தான் என்று கூறியுள்ளார்.

சுவிடசர்லாந்தின் இந்த முடிவு மிகவும் ஏமாற்றமளிப்பதாக Amnesty International என்னும் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்