போயிங் விமானங்களுக்கு விடுக்கப்படும் தடை... சுவிஸ் விமானங்களின் நிலை என்ன? வெளியான தகவல்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

எத்தியோப்பிய விமான விபத்து எதிரொலியாக போயிங் விமானங்களுக்கு பரவலாக தடை விதிக்கப்பட்டுவரும் நிலையில் சுவிஸ் விமான நிலைய அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

எத்தியோப்பியாவில் 157 பயணிகளை காவுகொண்ட விமான விபத்தை அடுத்து பாதுகாப்பு கருதி போயிங் விமானங்களை இயக்க சீனா உள்ளிட்ட சில நாடுகள் தடை விதித்தன.

இந்த வரிசையில் எத்தியோப்பிய விமான சேவை நிறுவனமும், கரீபியன் விமான சேவை நிறுவனமும் போயிங் விமானங்களுக்கு பாதுகாப்பு கருதி தடை விதித்துள்ளது.

இந்த நிலையில் சுவிஸில் போயிங் விமானங்களுக்கு தடை உள்ளனவா என்பது தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

சூரிச் விமான நிலையத்திகு குறிப்பிட்ட போயிங் ரக விமானங்கள் அதிக அளவில் செல்வதில்லை எனவும்,

சுவிஸில் இதுவரை போயிங் விமானங்களுக்கு தடை ஏதும் அறிவிக்கப்படவில்லை எனவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

மட்டுமின்றி சுவிஸ் விமான சேவையில் போயிங் 737 Max 8 ரக விமானங்கள் ஏதும் இல்லை எனவும் அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

இருப்பினும் ஐரோப்பிய விமான போக்குவரத்து பாதுகாப்பு மையம் போயிங் விமானங்களுக்கு தடை விதித்தால், அது சுவிட்சர்லாந்துக்கும் பொருந்தும் எனவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளன.

ஐரோப்பாவில் மட்டும் மொத்தம் 43 போயிங் 737 Max 8 ரக விமானங்கள் செயற்பாட்டில் இருப்பதாகவும்,

சில முக்கிய விமான சேவை நிறுவனங்கள் புதிதாக குறித்த வகை விமானங்களை வாங்க முன்பதிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்