தலையில் ஸ்கார்ஃப் அணிந்த இஸ்லாமிய கவுன்சிலருக்கு நேர்ந்த பரிதாபம்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

ஜெனீவாவில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள மதச்சார்பின்மை சட்டத்தால், இஸ்லாமியரான ஒரு கவுன்சிலர் கூட்டத்திற்கு வெளியே உட்கார வேண்டிய சூழல் ஏற்பட்டது.

Sabine Tiguemounine என்னும் அந்த கவுன்சிலர், கூட்டத்தில் பங்கேற்க வேண்டுமானால் தனது தலையில் அணிந்துள்ள ஸ்கார்ஃபை அகற்ற வேண்டும்.

ஆனால் அந்த சட்டத்திற்கு அடிபணிவதற்கு பதிலாக கூட்டத்தை புறக்கணித்தார் Sabine. மார்ச் மாதம் 9ஆம் திகதி அமுலுக்கு வந்த அந்த புதிய சட்டத்தை ஏற்க மறுத்துள்ள Sabine, ஜெனீவாவின் Meyrin முனிசிபாலிட்டியில் கவுன்சிலராக உள்ளார்.

55 பேர் இந்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்ததையடுத்து அது ஏற்றுக் கொள்ளப்பட்டது.

புதிய சட்டத்தின்கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் முன்னிலையில் கவுன்சில் கூட்டங்களில் பங்கேற்கும்போதோ, அரசு தொடர்பில் நடத்தப்படும் நடவடிக்கைகளில் ஈடுபடும்போதோ, தலையில் அணியும் ஸ்கார்ஃப் உட்பட எந்த மத சம்பந்தமான அடையாளங்களையும் அணியக்கூடாது.

ஆனால், Sabine கவுன்சில் கூட்டத்தில் ஸ்கார்ஃப் அணியாமல் பங்கேற்பதற்கு பதில், பொதுமக்களோடு மக்களாக உட்கார்ந்து கொண்டார்.

ஆனால் அவரால் கூட்டத்தில் நடத்தப்படும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய சட்டத்தை கிரீன்ஸ் கட்சியினர், பெண்ணிய அமைப்புகள், யூனியன்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தோர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers