பிரெக்சிட் தொடர்பில் பிரித்தானியாவில் வாழும் சுவிஸ் குடிமக்களுக்கு ஒரு முக்கிய செய்தி!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதையடுத்து பிரித்தானியாவில் வாழும் சுவிஸ் குடிமக்கள் மனதில் எழும் முக்கிய கேள்வி ஒன்றிற்கு இந்த செய்தி பதிலளிக்கிறது.

பிரெக்சிட்டுப்பு பிறகு பிரித்தானியாவில் தொடர்ந்து வாழ்வதற்கு செய்ய வேண்டியது என்ன?

பிரித்தானியாவுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையே செய்யப்பட்டுள்ள குடிமக்கள் உரிமை ஒப்பந்தம் ஒன்று, இரண்டு நாட்டு மக்களுக்கும் அடுத்த நாட்டில் அவர்கள் எந்த பிரச்சினையுமின்றி வாழலாம் என உறுதியளிக்கிறது.

ஏற்கனவே இந்த மக்கள் இந்த நாடுகளில் வசித்து வரும் பட்சத்தில், தற்போதுள்ள உரிமைகளே தொடரும் என அந்த ஒப்பந்தம் உறுதியளிக்கிறது.

குடியமர்வு நிலை

என்றாலும், பிரித்தானியாவில் வாழும் சுவிட்சர்லாந்து குடிமக்கள் ’குடியமர்வு நிலை’ (settled status) என்னும் ஒரு விடயத்திற்காக விண்ணப்பிக்க வேண்டும். பிரித்தானியாவில் வாழும் சுவிஸ் குடிமக்கள் இந்த குடியமர்வு நிலைக்கு, 2021 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 30 ஆம் திகதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த நிலை பிரித்தானியாவில் ஐந்து ஆண்டுகளாக வாழ்ந்து வரும் சுவிஸ் குடிமக்களுக்கு மட்டுமே அளிக்கப்படும் என்பது கவனிக்க வேண்டிய முக்கிய விடயமாகும்.

இதற்கு மூன்று விடயங்கள் தேவை, அடையாளத்தை உறுதி செய்யும் ஒரு ஆவணம், ஐந்தாண்டுகள் பிரித்தானியாவில் வாழ்ந்ததை உறுதி செய்யும் ஒரு ஆவணம் மற்றும் குற்றப்பின்னணி இல்லை என்பதற்கான உறுதி.

சரி, பிரித்தானியாவில் ஐந்தாண்டுகளுக்கு குறைவாக வாழ்ந்தவர்களின் நிலை என்ன? பிரித்தானியாவில் ஐந்தாண்டுகளுக்கு குறைவாக வாழ்ந்தவர்கள், ’குடியமர்வுக்கு முந்தைய நிலை’ (pre-settled status) என்ற நிலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த உரிமை பெற்றவர்களுக்கும், குடியமர்வு நிலை உடையவர்களுக்கு உள்ள அதே உரிமைகள் வழங்கப்படும்.

ஆனால் அவர்களுக்கு இன்னொரு வேலை உள்ளது... அவர்கள் மீண்டும் இன்னொரு விண்ணப்பம் அளிக்க வேண்டும்.

அதாவது அவர்கள் ஐந்தாண்டுகள் முடிவடைந்ததும் முழுமையான குடியமர்வு நிலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது?

இது தொடர்பாக கடந்த ஆண்டு ஒரு திட்டம் துவங்கப்பட்டது, அதாவது மக்கள் “EU Exit: ID Verification Check” என்னும் மொபைல் ஆப் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

இந்த வசதி இந்த ஆண்டு (2019ஆம் ஆண்டு) மார்ச் மாதம் 30ஆம் திகதி வரை பயன்பாட்டில் இருக்கும் என்பதோடு இதற்கு எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை. விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களுக்கு, அவர்களுக்கு குடியமர்வு நிலை வழங்கப்பட்டதற்கு அடையாளமாக ஒரு எண் வழங்கப்படும்.

ஒப்பந்தங்கள் எதுவுமற்ற பிரெக்சிட் நிறைவேறினால் என்ன ஆகும்?

ஒப்பந்தங்கள் எதுவுமற்ற பிரெக்சிட் நிறைவேறினாலும் குடிமக்களின் உரிமை ஒப்பந்தம் தொடரும். ஆனால் அப்படி நடக்கும் பட்சத்தில், மார்ச் 29 (2019)அன்றைய கணக்குப்படி யார் யார் ஏற்கனவே பிரித்தானியாவில் வாழ்ந்து வருகிறார்களோ அவர்கள் மட்டுமே இந்த குடியமர்வு நிலைக்கு விண்ணப்பிக்க முடியும். மட்டுமின்றி, விண்ணப்பிப்பதற்கான திகதி, 2020 டிசம்பர் 31 என மாற்றப்படும்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்