சுவிட்சர்லாந்தை உலுக்கிய கொலைச் சம்பவம்: ஒரு தந்தையின் நெகிழ வைக்கும் முடிவு

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் பாஸல் நகரில் பெண்மணி ஒருவரால் கொடூரமாக கொல்லப்பட்ட 7 வயது சிறுவனின் இறுதிச்சடங்கு ஊர்வலத்தை முன்னெடுத்து நடத்த நபர் ஒருவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

பாஸல் நகரின் St. Gallen ring பகுதியில் பட்டப்பகலில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

7 வயதேயான அப்பாவி சிறுவன் பாடசாலையில் இருந்து தனியாக குடியிருப்புக்கு திரும்பும் வழியில், திட்டிரென்று பின்னால் இருந்து 75 வயது சுவிஸ் பெண்மணியால் தாக்கப்பட்டான்.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுவன், மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டு, பின்னர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தான்.

இச்சம்பவம் சுவிஸ் மக்களை உலுக்கிய நிலையில் குறித்த தகவலை ஊடகங்களில் இருந்து தெரிந்துகொண்ட 35 வயதான Emi Salahi என்பவர் தமது விருப்பத்தை வெளியிட்டுள்ளார்.

இச்சம்பவம் தம்மை உலுக்கியதாக கூறும் சலாஹி, தம்மால் இயன்ற உதவியை அந்த சிறுவனுக்கு செய்ய வேண்டும் என விரும்புவதாக தமது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

சிறுவனையோ அவனது குடும்பத்தையோ தமக்கு தெரியாது எனவும், ஆனால் கொல்லப்பட்ட சிறுவனின் அதே வயதில் தமக்கு ஒரு மகள் இருப்பதாகவும், பெற்றோர் என்ற நிலையில் இச்சம்பவம் கொடூரம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த இக்கட்டான நேரத்தில் அவர்களின் துயரத்தை பங்கிடுவதாக கூறும் அவர், சனிக்கிழமை இறுதிச்சடங்கு ஊர்வலம் ஒன்றை முன்னெடுக்க முடிவு செய்துள்ளார்.

இது கொல்லப்பட்ட சிறுவனின் குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் ஆதரவாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த நிகழ்வில் பாஸல் நகர மக்கள் திரளாக கலந்துகொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பில் கைதான பெண்மணிக்கு மருத்துவ சோதனை மேற்கொள்ள இருப்பதாகவும், விசாரணைக்கு அவர் ஒத்துழைக்க மறுப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers