Brexit தொடர்பில் சுவிட்சர்லாந்துக்கு செல்லும் பிரித்தானியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

பிரெக்சிட்டுக்குப் பிறகு சுவிட்சர்லாந்துக்கு செல்லும் பிரித்தானியர்கள் விசா பெற தேவையில்லை, என சுவிஸ் அரசு அறிவித்துள்ளது.

நீண்ட நாட்கள் தங்கும் நோக்கில் சுவிட்சர்லாந்துக்கு செல்பவர்கள் கூட விசா பெறத்தேவையில்லை என்ற அறிவிப்பு பிரித்தானியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்களின் தடையற்ற போக்குவரத்து தொடர்பான சுவிட்சர்லாந்துக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான இரு பக்க ஒப்பந்தம், பிரெக்சிட் நிகழ்வதால் செல்லாமல் போகும் அந்த நாளிலிருந்து இந்த நடைமுறை அமுலுக்கு வரும் என சுவிட்சர்லாந்து வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

இதைப்போலவே, பிரித்தானியாவும், அது ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறியபின் பிரித்தானியாவுக்கு வரும் சுவிட்சர்லாந்து குடிமக்களுக்கு விசா தேவையில்லை என்பதை உறுதி செய்துள்ளது, அது குறுகிய காலம் தங்குவதற்கானாலும் சரி, நீண்ட காலம் தங்குவதற்கானாலும் சரி.

பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான உறவுகளில் என்ன நடந்தாலும், அதற்கு ஆயத்தமாக இருப்பதற்காகவே முன்கூட்டியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுவிஸ் அரசாங்கத்தின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers