சுவிஸ் பெண்மணியால் கொல்லப்பட்ட சிறுவனின் உடல் நல்லடக்கம்: கண்ணீருடன் விடையளித்த பொதுமக்கள்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் பாஸல் நகரில் பட்டப்பகலில் பெண்மணி ஒருவரால் படுகொலை செய்யப்பட்ட சிறுவனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் ஆர்காவ் பகுதியில் குடியிருக்கும் Emi Salahi என்பவர் விடுத்த அழைப்பை ஏற்று ஆயிரக்கணக்கான மக்கள் இறுதி அஞ்சலி ஊர்வலத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

கொல்லப்பட்ட சிறுவன் இலியாஸ் தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கொசோவோவில் பிறந்தவர் என்பதால், அவரது உறவினர்கள் சிறுவனின் சடலத்தை பிறந்த நாட்டுக்கே எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்துள்ளனர்.

குறித்த சிறுவனின் நினைவாக பாஸல் நகரில் பெருந்திரளான மக்கள் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டுள்ளது தங்களால் மறக்க முடியாத நிகழ்வு என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் நேரப்படி சுமார் 2.20 மணியளவில் துவங்கிய இந்த இறுதி அஞ்சலி ஊர்வலத்தில் முக்கிய பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த இக்கட்டான நேரத்தில் சிறுவனின் உறவினர்களும் குடும்பத்தாரும் தனித்துவிடப்படவில்லை, அவர்களுடன் நாங்கள் இருக்கிறோம் என்பதை உணர்த்தவே இந்த நிகழ்வில் கலந்து கொண்டதாக பெடரல் கவுன்சில் தலைவர் எலிசபெத் ஆர்க்கர்மான் தெரிவித்துள்ளார்.

7 வயதேயான சிறுவனின் இழப்பு பாஸல் நகரை கடந்து சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, குவிந்த பொதுமக்களின் எண்ணிக்கையில் இருந்து தெரியவந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இலியாஸ் இனி அந்த பாடசாலைக்கு செல்ல முடியாது, ஆனால் அவனை எங்களால் மறக்க முடியாது என பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers