லொட்டரியில் 184 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் அள்ளிய பெண்மணி: இப்போது அவரின் நிலை!

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் பெண் ஒருவர் யூரோ மில்லியன்ஸ் லொட்டரியில் 184 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் அள்ளிய தகவல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

குறித்த சாதனை தொகையை அள்ளிய அந்த நபரின் பெயர் விவரங்களை ரகசியமாக வைக்கப்பட்டிருந்தாலும், அவர் ஒரு பெண் என்ற தகவல் மட்டும் வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் ஆர்காவ் மண்டலத்தை சேர்ந்த அவர் பெருந்தொகை லொட்டரியில் வென்ற நிலையில் தற்போது வருமான வரியில் சலுகை பெறும் பொருட்டு, வேறு மண்டலத்திற்கு குடிபெயர இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவர் லொட்டரியில் 184 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் வென்றுள்ளார். இருப்பினும் இதுவரை அவர் தனது வேலையை விட்டுவிடவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும், நாளேடுகளில் தமது புகைப்படத்துடன் இந்த செய்தி வெளியாவதை அவர் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.

லொட்டரியில் வென்றவரின் ரகசியம் பாதுகாப்பதற்காக, அந்த நிறுவன அதிகாரிகள் அவரை தலைமையகத்திற்கு வரவழைக்காமல் நேரில் சென்று சந்தித்துள்ளனர்.

குறித்த பெண்மணிக்கு கிடைத்த லொட்டரி பணத்தில் மண்டல நிர்வாகத்திற்கு வரியாக 23 மில்லியன் பிராங்குகள் செலுத்த வேண்டும்.

சுவிஸ் அரசாங்கத்திற்கு வரியாக 21 மில்லியன் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers