சுவிஸ் பெண்மணி மீது வெளிநாட்டு இளைஞர்கள் கொலைவெறித் தாக்குதல்: உதவ முன்வராத பொதுமக்கள்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் ரயில் நிலையம் ஒன்றில் பெண்மணி ஒருவரை இளைஞர்கள் கும்பல் ஒன்று கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூரிச் நகரில் உள்ள Embrach-Rorbas ரயில் நிலையத்திலேயே குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

சனிக்கிழமை பகல் குறித்த ரயில் நிலையித்தில் 38 வயதான பெண் ஒருவர் Selecta இயந்திரத்தை பயன்படுத்தும் முனைப்பில் இருந்துள்ளார்.

அப்போது இளைஞர்கள் கும்பல் ஒன்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த கும்பல், குறித்த பெண்மணியை சரமாரியாக தாக்கியுள்ளது.

சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் எவரும் உதவிக்கு வரவில்லை எனவும், தாமாகவே மருத்துவ உதவி கேட்டு அழைத்ததாகவும்,

தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் உள்ளூர் நாளேடு ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.

இதில் அவரது விலா எலும்புகள் உடைந்துள்ளதாகவும், நுரையீரல் சேதமடைந்து அதில் தண்ணீர் புகுந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இளைஞர்களின் தாயாரை கேவலமாக பேசியதாலையே அவர்கள் குறித்த பெண்மணியை தாக்கியுள்ளதாக பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.

ஆனால் தாம் எவரையும் தரக்குறைவாக பேசவில்லை என அந்த சுவிஸ் பெண்மணி தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக மண்டல பொலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், அதில் இருவர் சுவிஸ் இளைஞர்கள் எனவும், எஞ்சியவர்களில் இளம்பெண் ஒருவர் கொசோவோ நாட்டவர் எனவும், இளைஞர்களில் ஒருவர் இத்தாலியர் எனவும் இன்னொருவர் உக்ரைன் நாட்டவர் எனவும் தெரியவந்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers