பிரபல சுவிஸ் சுற்றுச்சூழலியலாளர் மரணம்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பிரபல சுற்றுச்சூழலியலாளரான Franz Weber தனது 91ஆவது வயதில் காலமானார்.

150க்கும் மேற்பட்ட சுற்றுச்சூழல் பிரச்சாரங்களை முன்னின்று நடத்திய பேஸலைச் சேர்ந்த Franz Weber, ஆல்ப்ஸ் பகுதியின் நிலப்பரப்பை பாதுகாப்பதற்காகவும், வாழ்வதற்கு வீடிருக்கும் நிலையிலும், விடுமுறையைக் கழிப்பதற்காக இரண்டாவதாக வீடுகள் கட்டுவதற்கு எதிராகவும் போராடியவர்.

50 ஆண்டுகளாக சுற்றுச்சூழலுக்காக குரல் கொடுத்த Franz Weber, சுவிஸ் தலைநகரான பெர்னில் மரணமடைந்தார்.

கனடாவில் சீல்கள் வேட்டையாடப்படுவதிலிருந்து Lavaux திராட்சைத் தோட்டங்களை மீட்பது வரை, ஆஸ்திரியாவின் Danube காட்டைக் காப்பதிலிருந்து கிரீஸின் Delphi பகுதியை பாதுகாப்பது வரை அவர் தலையிடாத பிரச்சினைகளே இல்லை எனலாம்.

ஒரு பத்திரிகையாளராக தனது வாழ்வைத் தொடங்கிய Franz Weberக்கு 1960களில், இரண்டாவது வீடுகளைக் கட்டி ஆல்ப்ஸ் நிலப்பரப்பை பாதிப்போருக்கு எதிராக குரல் கொடுக்கும்போது சுற்றுச்சூழல் மீது தாகம் ஏற்பட்டது.

1977இல் கனடாவில் சீல்கள் கொல்லப்படுவதை எதிர்த்து 70 பத்திரிகையாளர்களுடனும் பிரபல பிரெஞ்சு நடிகை Brigitte Bardotஉடனும் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது Franz Weber உலகத்தின் கவனத்தை தன்பால் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers