கடத்தல்காரர்களின் அட்டூழியம்: உயிருக்கு போராடும் நான்கு உயிர்கள்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டு கடத்தல்காரர்களால் நான்கு நாய்க் குட்டிகள் உயிருக்கு போராடுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக இரு கடத்தல்காரர்களை சுவிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இத்தாலி மற்றும் உக்ரைன் நாட்டில் இருந்து 17 நாய்க்குட்டிகளை குறித்த நபர்கள் சுவிட்சர்லாந்துக்கு கடத்தி வந்துள்ளனர்.

இதில் நான்கு குட்டிகளுக்கு மயக்க மருந்து அளித்துள்ளதாகவும், இதனால் அந்த நான்கு குட்டிகளும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைதான இருவரும் கடந்த 2016 ஆம் ஆண்டில் இருந்தே சுவிட்சர்லாந்துக்கு சட்டவிரோதமாக நாய்க்குட்டிகளை கடத்தி வருவதை வாடிக்கையாக செய்து வந்துள்ளனர்.

தற்போது மட்டும் 17 நாய்க்குட்டிகளுடன் இருவரும் சிக்கியுள்ளனர். மட்டுமின்றி இருவரும் இதுவரை தடுப்பூசி சான்றிதழ்களை திருத்தியது, விலங்கு சுகாதார பொலிஸ் விதிகளை மீறியது உள்ளிட்ட குற்றங்களை செய்துள்ளனர். வந்துள்ளனர்.

இதனால் இருவரும் கொள்ளை லாபம் பார்த்துள்ளனர். மட்டுமின்றி இணையம் வழியாக நாட்டின் பல்வேறு மாகாணங்களுக்கு விற்பனை செய்துள்ளனர் என்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers